கண்ணனூர் ஊராட்சி கிராமசபா கூட்டம் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் . இராஜ் வரவேற்றார். ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சசி-யுடன் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரின் முத்தான 5 திட்டங்கள் குறித்து கருத்து கேட்டு பிறகு நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமசபா தீர்மானங்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு தீர்மானமாக 10 டயர்களுக்கு மேல் டாரஸ் லாரிகளை கிராம சாலைகள், ஒன்றியசாலைகள் மாநில சாலைகளில் பயணிக்க தமிழக அரசு தடை செய்ய கேட்டு தீர்மானிக்கப்பட்டது. முதல்வரின் கிராமசபை உரை ஒலிபரப்பப்பட்டது. துணைத் தலைவி ஜோஸ்பின் ராணி நன்றி கூறினார். கூட்டத்தில் ஊராட்சி கவுன்சிலர்கள் அனிதா அகஸ்டின், யோவான், ஜோன், கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை ஜான் ஜீவா, சரோஜினி உட்பட ஊராட்சி பணியாளர்கள், தூய்மை காவலர்கள், என்ஆர்ஜிஇஎஸ் ஒருங்கிணைப்பாளர் அனிதா ரவி உட்பட மேற்பார்வையாளர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.