அமைதி மனித வள கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா கன்னியாகுமரி ஒய் எம் சி ஏ யில் வைத்து நடந்தது. ஷஞ்சய் ஷாலஜி, முத்து கிருஷ்ணன், சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைதி மனித வள கவுன்சில் இயக்குனர் ஜெபராஜ் வரவேற்றார். தமிழ்நாடு பனை மரங்களின் கூட்டமைப்பு தலைவர் தாமோதரன், சேலம் மகளிர் முன்னேற்ற இயக்குனர் லோக சங்கரி, சேலம் ஜெய்ராம் பப்ளிக் பள்ளி முதல்வர் ராஜேந்திரன், ராமலிங்கம், வெற்றி கிருஷ்ணன், பாண்டு ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். யோகவா, அர்ஜுனன், சஜீத் சுவாமிஜி, சுரபி செல்வராஜ் ஆகியோர் நல உதவி நிகழ்வுகளை துவக்கி வைத்து சேவை செம்மல் விருதுகளை வழங்கினார்கள். பெமிலா ஏஞ்சலின் தொகுத்து வழங்கினார்.
கன்னியாகுமரியல் விருது வழங்கும் விழா
