அஞ்சலகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா
தேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் நலன் மற்றும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ளன. அதில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் இவற்றை கருத்தில் கொண்டு செல்வமகள் சேமிப்பு திட்டம் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெண்களுக்காக மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் 7.5 சதவீதம் வட்டி விகிதத்தில் நடைமுறையில் உள்ளது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு, 24.1.2024 அன்று செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் தொடங்கும் சிறப்பு முகாமானது கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. எனவே தேசிய பெண் குழந்தைகள் தின விழாவினை கொண்டாடும் இத்தருணத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் அனைவருக்கும் கணக்கு தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்று கன்னியாகுமரி
அஞ்சல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.