கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று (25-3-2024) மதியம் 12.01 மணியளவில் வேட்பு மனுவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்தார். அப்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட பலர் இருந்தனர்.