பல்வேறு திருட்டு,செயின் பறிப்பு ஆகிய குற்ற செயல்களில் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரபல ரவுடி கைது. கன்னியாகுமரி போலீசார் அதிரடி
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெர்லின் ராஜ் (33) என்பவர் குற்ற சரித்திரம் பதிவேடு ரவுடி ஆவார். இவர் மீது பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் கொலை , கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மிரட்டல் ஆகிய குற்ற வழக்குகள் உள்ளன.கொலை வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கபட்டு இருந்தது.
மேற்படி குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளி மெர்லின் ராஜ் என்பவரை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி தீவிர வேட்டையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட தலைமறைவாக இருந்த குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில்
தனிப்படையினர் மெர்லின் ராஜ்யை கைது செய்து அவனிடம் இருந்து திருட்டு நகைகளை மீட்டனர். இந்த குற்றங்களுக்கு அவனுக்கு உடந்தையாக இருந்த பூந்தோப்பு ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.