கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆலோசனையின் பெயரில் வித்யாதர் (பயிற்சி) தலைமையில் மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து வன ஊழியர்களுக்கான பாம்பு பிடிக்கும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் ஊர்வனம் அறக்கட்டளையின் சார்பில் பாம்புகளின் வகைகள், அவைகளால் ஏற்படும் நன்மைகள், அவைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் கையாளும் தன்மை ஆகியவற்றை குறித்து விரிவான விளக்கவுரை அளிக்கப்பட்டது. பின்னர் சாரைப்பாம்பு,மலைப்பாம்பு, மற்றும் நல்ல பாம்பு ஆகியவற்றை ஊழியர்களுக்கு நேரடியாகப் பிடித்து கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமை பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். கனனியாகுமரி மாவட்ட அனைத்த வனச்சரக பணியாளர்களும் கலந்துக் கொண்டனர்