கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய வியாகுல அன்னை சொரூபத்தில் கண்ணீர்

Share others

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொன்னக்குழிவிளையில் தூய வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி நடப்பது வழக்கம். அதன்படி ஞாயிறு காலை திருப்பலி முடிந்த உடன் வழக்கம் போல் ஆலயத்தின் உள்ளே உள்ள தூய வியாகுல அன்னை சொரூபத்திடம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி வழிபாட சென்ற போது தூய வியாகுல அன்னை சொரூபத்தில் இருந்து கண்ணீர் வெளி வருவதாக தெரிவித்துள்ளார். இது உடனே அங்கு இருந்தவர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கேள்விப்பட்டவர்கள் வாகனங்களில் வந்து பார்த்து செல்கின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *