கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கிராமத்தில் உள்ள பெரிய குளம் ஏலா என்னும் பகுதியில் நெல் அறுவடை செய்வதற்காக தங்கி இருந்த 6 நபர்கள் பெய்த கனமழை யின் போது மின்னல் தாக்கியதன் காரணமாக சவரி ராஜா(23) என்பவர் உயிரிழந்தார். நேசபாய் (65), செல்லத்துரை (65), செல்லப்பன் (60) ஆகியோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையிலும், பிரபாகரன் (32), தவசி லிங்கம் (47) ஆகியோர் படர்நிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் நபர்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் சென்று பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் கூறினார்.