கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்கள் பலர் இருந்தனர்.
தோவாளை பகுதிகளிலும் ஆய்வு செய்தார். கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட ஏழுதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், உதவி ஆட்சியர் ( பயிற்சி) ரஜத் பீட்டன் உட்பட பலர் இருந்தனர். திருப்பதி சாரம் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். வடிவீஸ்வரம் பகுதியில் படகில் சென்று மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.