கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை இருவழி
இருப்பு பாதை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் 28.1.2024
முதல் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் – ஒழுகினசேரி பாலம் வழியாக இருவழியில் செல்லும் வாகனங்களை
28.1.2024 முதல் 20 தினங்கள் முழுமையாக போக்குவரத்து மாற்றம் மேற்கொள்வதால்,
அப்டா மார்க்கெட்டில் இருந்து புத்தேரி வரை புதிதாக அமைக்கப்பட்டு உள்ள நான்கு
வழிச்சாலை வழியாக அசம்பு ரோடு வந்து, நாகர்கோவில் செல்ல மாற்று வழித்தடத்தில்
இருவழி போக்குவரத்து இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளில் இருந்து
வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் தக்கலையில் இருந்து
ஆரல்வாய்மொழி வழியாக செல்லும் மற்ற வாகனங்கள், களியங்காடு சந்திப்பில் இருந்து
இடதுபுறமாக செல்லும் சாலை வழியாக இறச்சகுளம், புத்தேரி வழியாக அப்டா மார்க்கெட்
சென்றடையுமாறும் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்ற விபரம்
தெரிவிக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு
வழங்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கேட்டுக்கொள்கிறார்.