கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர்
அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், வாக்குச்சாவடி
மறு சீரமைப்பு குறித்த புத்தகத்தினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்
வெளியிட்டு தெரிவிக்கையில் –
/
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 1695 வாக்குச்சாவடிகள் உள்ளது.
1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள
வாக்குச்சாவடிகளை இரண்டாக
பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பத்மநாபபுரம் தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகள் கூடுதலாக
அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1698 வாக்கு சாவடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியை பொறுத்த மட்டில் 310 வாக்குச்சாவடிகளும் நாகர்கோவிலில்
275 வாக்குச்சாவடிகளும் குளச்சலில்
300 வாக்குச்சாவடிகளும்
பத்மநாபபுரத்தில் 273 வாக்குச்சாவடிகளும்,
கிள்ளியூரில் 268 வாக்குச்சாவடிகளும் விளவங்கோட்டில்
272 வாக்குச்சாவடிகளும் தற்பொழுது உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் 3 வாக்குச்சாவடியும்
நாகர்கோவில் தொகுதியில் 16 வாக்குச்சாவடியும் குளச்சல் தொகுதியில் 5 வாக்குச்சாவடியும்,
பத்மநாபபுரத்தில் 10 வாக்குச்சாவடியும் விளவங்கோடு தொகுதியில் 28 வாக்குச்சாவடியும் கிள்ளியூர்
தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடி என 64 வாக்குச்சாவடிகள் தற்பொழுது செயல்பட்டு வரும்
இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும்
22 வாக்குச்சாவடிகளின் பெயர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .அரசியல் கட்சி
நிர்வாகிகள் வாக்குச்சாவடி மாற்றம் தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக தகவல்
கொடுத்தால் அந்த இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
/
முன்னதாக வாக்குச்சாவடிகள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்போது அதன்
அருகில் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை
வசதிகள் வாக்குச்சாவடிகளின் அருகில் இருக்குமாறும், அரசில் கட்சி பிரதிநிதிகள் மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதரிடம் கேரிக்கை வைத்தார்கள்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில்
வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் வட்டாட்சியர் சுசீலா, வட்டாட்சியர்கள்
ரஜேஷ் (அகஸ்தீஸ்வரம்), வினைதீர்த்தான் (தோவாளை), கண்ணன்(கல்குளம்),
அனிதா குமாரி (கிள்ளியூர்), குமாரவேல் (விளவங்கோடு), முருகன் (திருவட்டார்)
உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், துணை வட்டாட்சியர்கள், அலுவலர்கள் உட்பட
பலர் கலந்து கொண்டார்கள்.