கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த வெயிலின் தாக்கத்தினால் வெளியில் செல்லவே சிரமமான நிலை உருவாகியது. இதனால் வியர்த்து கொட்டியது. இந்த நிலையில் இன்று (12 ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து பெய்யாமல் விட்டு விட்டு பெய்த நிலையில் இருந்தது. மாவட்டத்தில் பெய்த மழையில் தண்ணீர் ஓடும் அளவில் இருந்தது.