கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நீட் தேர்வு மையங்கள் ஒவ்வொரு பாயிண்டிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நீட் தேர்வு எழுத செல்பவர்களை சிரமம் இல்லாமல் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் செல்ல வழிகாட்டுவது முதல் அனைத்து செயல்களிலும் ஈடுபடுவார்கள். அதேபோல் அரசு பஸ்களில் தேர்வு மையங்களுக்கு செல்பவர்களை எல்லா பஸ்களிலும் ஏற்றி இறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நீட் தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு செல்பவர்கள் அரசு பஸ்களில் சிரமம் இல்லாமல் செல்ல வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் எடுத்து உள்ளனர். நீட் தேர்வு மையங்களுக்கு செல்ல சிரமம் இருந்தாலும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டு அவர்களின் வழிகாட்டுதல்படி தேர்வு மையங்களுக்கு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் தெரிவித்து உள்ளார்.