கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, திருவட்டார் கல்குளம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கு 1433-ம் ஆண்டுக்கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் குறுவட்டத்திற்குட்பட்ட தேரேகால்புதூர் கிராமம், நாகர்கோவில் வடக்கு நகரம், நாகர்கோவில் தெற்கு நகரம், வேம்பனூர் மேற்கு கிராமம், வேம்பனூர் கிழக்கு கிராமம்,வடிவீஸ்வரம் கிழக்கு நகரம்,வடிவீஸ்வரம் வடக்கு நகரம், வடிவீஸ்வரம் தெற்கு நகரம், வடசேரி கிழக்கு நகரம், வடசேரி மேற்கு நகரம், வடசேரி தெற்கு நகரம், கணியாகுளம் கிராமம், புத்தேரி கிராமம், நீண்டகரை ஏ மேற்கு கிராமம், நீண்டகரை ஏ கிழக்கு கிராமங்களுக்கு 11.6.2024 அன்றும், இராஜாக்கமங்கலம் குறுவட்டத்திற்குட்பட்ட நீண்டகரை பி கிராமம், இராஜாக்கமங்கலம் கிராமம், மதுசூதனபுரம் வடக்கு கிராமம், மதுசூதனபுரம் தெற்கு கிராமம், தர்மபுரம் வடக்கு கிராமம், தர்மபுரம் தெற்கு கிராமம், தர்மபுரம் கிழக்கு கிராமம், பறக்கை கிராமம், தெங்கம்புதூர் கிராமம், புத்தளம் கிராமங்களுக்கு 12.6.2024 அன்றும், சுசீந்திரம் குறுவட்டத்திற்கு உட்பட்ட சுசீந்திரம் கிராமம், இரவிபுதூர் கிராமம், தேரூர் கிராமம், ராமபுரம் கிராமம், மருங்கூர் கிராமம், நல்லூர் கிராமம், குலசேகரபுரம் கிராமம், மைலாடி கிராமகளுக்கு 13.6.2024 அன்றும், கன்னியாகுமரி குறுவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி கிராமம், லீபுரம் கிராமம், அகஸ்தீஸ்வரம் கிராமம், கோவளம் கிராமம், அழகப்பபுரம் கிராமம், அஞ்சுகிராமம் கிராமம், கொட்டாரம் கிழக்கு கிராமம், கொட்டாரம் மேற்கு கிராமம், வடக்கு தாமரைகுளம் கிராமம், தெற்கு தாமரைகுளம் கிராமங்களுக்கு 14.6.2024 அன்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற உள்ளது.
கிள்ளியூர் வட்டம் மிடலாம் குறுவட்டத்திற்குட்பட்ட மிடாலம் - எ கிராமம், மிடாலம் - பி கிராமம், கருங்கல் கிராமம், மத்திகோடு கிராமம், கீழ்மிடலாம் - எ கிராமம், கீழ்மிடலாம் - பி கிராமம், கீழ்குளம் - எ கிராமம், இணையம்புத்தன்துறை கிராமம், கீழ்குளம் - பி கிராமம், கிள்ளியூர் - எ கிராமம், கிள்ளியூர் - பி கிராமம், பாலூர் கிராமம், முள்ளங்கினாவிளை கிராமங்களுக்கு 11.6.2024 அன்றும், பைங்குளம் குறுவட்டத்திற்கு உட்பட்ட கொல்லங்கோடு எ கிராமம், கொல்லங்கோடு பி கிராமம், சூழால் கிராமம், குளப்புறம் கிராமம், அதங்கோடு கிராமம், ஆறுதேசம் கிராமம், முஞ்சிறை கிராமம், பைங்குளம் கிராமம், தேங்காய்பட்டணம் கிராமம், ஏழுதேசம் - எ கிராமம், ஏழுதேசம் - பி கிராமம், ஏழுதேசம் - சி கிராமம், மெதுகும்மல் கிராமம், அடைக்காகுழி கிராமங்களுக்கு 12.6.2024 அன்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற உள்ளது.
தோவாளை வட்டம் தோவாளை குறுவட்டத்திற்கு உட்பட்ட வீரமார்த்தாண்டன்புதூர் கிராமம், தோவாளை கிராமம், ஆரல்வாய்மொழி வடக்கு கிராமம், ஆரல்வாய்மொழி தெற்கு கிராமம்,குமாரபுரம் கிராமம், செண்பகராமன்புதூர் கிராமம், மாதவலாயம் கிராமம், சண்முகபுரம் கிராமம், திருப்பதிசாரம் கிராமங்களுக்கு 11.6.2024 அன்றும், அழகியபாண்டியபுரம் குறுவட்டத்திற்கு உட்பட்ட அழகியபாண்டியபுரம் கிராமம், காட்டுப்புதூர் கிராமம், அனந்தபுரம் கிராமம், திடல் கிராமம், அருமநல்லூர் கிராமம், தடிக்காரன்கோணம் கிராமம், ஞாலம் கிராமம், தெரிசனங்கோப்பு கிராமங்களுக்கு 12.6.2024 அன்றும், பூதப்பாண்டி குறுவட்டத்திற்கு உட்பட்ட பூதப்பாண்டி கிராமம், சிறமடம் கிராமம், இறச்சகுளம் கிராமம், நாவல்காடு கிராமம், தாழக்குடி கிராமம், ஈசாந்திமங்கலம் வடக்கு கிராமம், ஈசாந்திமங்கலம் தெற்கு கிராமங்களுக்கு 13. 6.2024 அன்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி தலைமையில் நடைபெற உள்ளது.
திருவட்டார் வட்டம் திருவட்டார் குறுவட்டத்திற்கு உட்பட்ட மேக்கோடு கிராமம், அருவிக்கரை கிராமம், திருவட்டார் கிராமம், குமரன்குடி கிராமம், அயக்கோடு கிராமம், குலசேகரம் - எ கிராமம், குலசேகரம் - பி கிராமம், ஆற்றூர் கிராமம், வீயன்னூர் - எ கிராமம், செறுகோல் கிராமம், ஏற்றக்கோடு கிராமம், வீயன்னூர் - பி கிராமம், கண்ணனூர் கிராமங்களுக்கு 11.6.2024 அன்றும், குலசேகரம் குறுவட்டத்திற்கு உட்பட்ட திற்பரப்பு கிராமம், பொன்மனை - எ கிராமம், தும்பக்கோடு - எ கிராமம், சுருளகோடு கிராமம், பேச்சிப்பாறை கிராமம் பொன்மனை - பி கிராமம், தும்பக்கோடு - பி கிராமம், பெருஞ்சாணி கிராமங்களுக்கு 12.6.2024 அன்று பத்மனாபபுரம் வருவாய கோட்டாட்சியர் தமிழரசி தலைமையில் நடைபெற உள்ளது.
விளவங்கோடு வட்டம் விளவங்கோடு குறுவட்டத்திற்கு உட்பட்ட விளவங்கோடு கிராமம், களியக்காவிளை கிராமம், குழித்துறை நகரம், நல்லூர் கிராமம், நட்டாலம் - எ கிராமம், உண்ணாமலைக்கடை கிராமம், நட்டாலம் - பி கிராமம், கொல்லஞ்சி கிராமம், குன்னத்தூர் கிராமம், விளாத்துறை கிராமங்களுக்கு 11.6.2024 அன்றும், இடைக்கோடு குறுவட்டத்திற்கு உட்பட்ட இடைக்கோடு கிராமம், தேவிகோடு கிராமம், பாகோடு - எ கிராமம், மருதங்கோடு கிராமம், பாகோடு - பி கிராமம், அண்டுகோடு - எ கிராமம், அண்டுகோடு - பி கிராமம், பளுகல் கிராமம், மலையடி கிராமங்களுக்கு 12.6.2024 அன்றும், அருமனை குறுவட்டத்திற்கு உட்பட்ட அருமனை கிராமம், மஞ்சாலுமூடு கிராமம், வெள்ளாங்கோடு கிராமம், முழுக்கோடு கிராமம், சிதறால் கிராமம், களியல் கிராமம், கடையால் கிராமம், மாங்கோடு கிராமம், புலியூர்சாலை கிராமங்களில் 13.6.2024 மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது.
கல்குளம் வட்டம் தக்கலை குறுவட்டத்திற்கு உட்பட்ட தக்கலை கிராமம், கல்குளம் கிராமம், கோதநல்லூர் கிராமம், வேளிமலை கிராமம், பத்மனாபபுரம் - எ கிராமம், பத்மனாபபுரம் - பி கிராமம், முத்தலக்குறிச்சி கிராமம், சடையமங்கலம் கிராமம், குமாரபுரம் கிராமங்களுக்கு 11.6.2024 அன்றும், திருவிதாங்கோடு குறுவட்டத்திற்கு உட்பட்ட இரணியல் கிராமம், திருவிதாங்கோடு கிராமம், ஆத்திவிளை கிராமம், நுள்ளிவிளை - எ கிராமம், நுள்ளிவிளை - பி கிராமம், திக்கணங்கோடு கிராமம், கப்பியறை - எ கிராமம், வாள்வச்ச கோஷ்டம் - எ கிராமம், கப்பியறை - பி கிராமம், வாள்வச்ச கோஷ்டம் - பி கிராமம், மருதூர்குறிச்சி கிராமம், முளகுமூடு கிராமங்களுக்கு 12.6.2024 அன்றும், குளச்சல் குறுவட்டத்திற்கு உட்பட்ட கடியப்பட்டணம் கிராமம், மணவாளக்குறிச்சி கிராமம், லெட்சுமிபுரம் கிராமம், வெள்ளிச்சந்தை - எ கிராமம், வெள்ளிச்சந்தை - பி கிராமம், வெள்ளிமலை கிராமம், மண்டைக்காடு கிராமம், குளச்சல் - எ நகரம், குளச்சல் -பி நகரம், சைமன் காலனி கிராமம், ரீத்தாபுரம் கிராமம், செம்பொன்விளை கிராமம், நெய்யூர் கிராமம், கல்லுக்கூட்டம் கிராமங்களுக்கு 13.6.2024 அன்றும், குருந்தன்கோடு குறுவட்டத்திற்கு உட்பட்ட தலகுளம் கிராமம்,குருந்தன்கோடு - எ கிராமம், திங்கள்நகர் கிராமம், கக்கோட்டுதலை கிராமம், குருந்தன்கோடு - பி கிராமம், ஆளுர் - எ கிராமம், வில்லுக்குறி - எ கிராமம், ஆளுர் - பி கிராமம், வில்லுக்குறி - பி கிராமம், வில்லுக்குறி - சி கிராமங்களுக்கு 14.6.2024 அன்றும் உதவி ஆணையர் (ஆயம்) லொரைட்டா தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி வருவாய் தீர்வாய தணிக்கை நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நியமிக்கப்பட்டு உள்ள வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் வழங்கி தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்.