கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.8.2024 முதல் 7.8.2024 வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும். காற்றின் அளவு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரையிலும் சில நேரங்களில் மணிக்கு 55 கி.மீ வேகம் அதிகமாக இருக்கும் எனவும் தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுவித்து உள்ளனர்.
கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்களும், கடரோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் கட்டி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுற்றுலா பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கும், மற்றும் கடலில் குளிக்கவும் செல்ல வேண்டாம் எனவும், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.