கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடல்

Share others

தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள் – அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம்

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  தலைமையில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா,  நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்  முன்னிலையில் நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியர்களிடையே கலந்துரையாடி பேசுகையில்-


தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து குறிப்பாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். தமிழ்நாடு அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டாலும், பள்ளிக் கல்வித்துறைக்கு தான் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். காரணம் மாணவ மாணவியராகிய நீங்கள் தான் எதிர்கால தூண்கள். எனவே அனைவரும் நன்றாக கல்வி பயின்று, ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதேயாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரை பகுத்தறிவு பெற்ற மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. மேலும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் கனவை நிறைவேற்றும் வகையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு இடமளித்த மாவட்டம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு அமைச்சர்களும் அவர்களது துறை சாரந்த பணிகள் குறித்து களஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் இதுநாள் வரை சுமார் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று துறை சார்ந்த ஆய்வு பணிகள் மேற்கொண்டு இருக்கிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் தான் பள்ளிக் கல்வித்துறை நன்றாக முன்னேறி பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

எல்லா நிலைகளில் உள்ள மாணவ மாணவியர்களை உயர்த்திடும் வகையில் தான் மாணவ மாணவியர்களுக்கு திறன்பயிற்சி வழங்கிட நான் முதல்வன் திட்டம், வறுமையை காரணம் காட்டி எந்தவொரு மாணவிகளும் படிக்காமால் இருக்க கூடாது என்பதற்காக அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயில மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அதேபோன்று மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுதிட்டம், பல்வேறு கலைத்திருவிழாக்கள், இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் நம்முடைய முதலமைச்சர்.
மாணவ மாணவியர்களாகிய உங்களுக்கு பாடங்களில் எந்தவிதமான சந்தேகங்கள் இருந்தாலும் கையை உயர்த்தி ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காக பயந்துகொண்டு, கூச்சப்பட்டு கொண்டு இருக்காதீர்கள். அறிவை அறிவியல் சார்ந்து கற்றுக் கொள்ளுங்கள். மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்கமால் அறிவியல் சார்ந்து கற்றுக் கொள்ளுங்கள். 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களாகிய நீங்கள் இன்னும் 5 மாதங்கள் நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வி பயின்று, வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் நாற்பத்தி நாலாயிரத்தி நாற்பத்தி இரண்டு கோடி ரூபாய் பள்ளிக் கல்வி துறைக்கு என நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் கனவை நிறைவேற்றும் வகையில் நன்றாக கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தொடக்ககல்வி இயக்குநர் முனைவர்.நரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், மாநில பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர் ராஜீவ் காந்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளை, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சரவணன், வழக்கறிஞர்கள் சிவராஜ், சதாசிவம், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருட்பணி மரிய செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *