கல்வியிலும், சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய மாவட்டம் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கியதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறைகளின் சார்பில் நாகர்கோவில் தெ.தி.இந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், முன்னாள் அமைச்சர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் (குளச்சல்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு) ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சரின் நல் ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் இன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினமான இன்று அவர் யாருக்கெல்லாம் பாடுபட்டாரோ எந்த சமுதாயத்தின் இழிநிலையை துடைத்து சமதர்ம சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் ஆசைப்பட்டார்களோ, அந்த சமுதாயத்தின் உயர்வுக்கு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். குறிப்பாக அண்ணல் அம்பேத்கரின் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை தொழில் முனைவோராக மாற்றக்கூடிய வகையில் அவர்களுக்கான அந்த வாய்ப்பினை உருவாக்கக்கூடிய நிகழ்வாகவும், சமுதாயத்தின் பல்வேறு படிநிலைகளில் இருக்கக்கூடிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் என ஒட்டுமொத்தமாக வழங்கக்கூடிய நிகழ்வாக இந்த நிகழ்ச்சி உள்ளது.
அண்ணல் அம்பேத்காரை நினைவு கூறும்போது அவர் இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்து அரசியலமைப்பை வகுத்து தந்தவர் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் என்ற பெருமைகளை எல்லாம் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களுடைய குரலாக இன்றும் இருந்து வருகிறார். பொருளாதரத்தில் பின்தங்கி அனைத்து கடைகோடி பொதுமக்களுக்கும் சமுதாயத்தில் எல்லா வகையிலும் வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான முக்கிய திறவுகோல் கல்வி ஒன்று தான் என்றார். எனவே அந்த கல்வி அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உரிமைக்காக போராடியவர் அண்ணல் அம்பேத்கர். அந்த கல்வி என்கின்ற ஆயுதம் சாதாரண மனிதனின் கையில் கிடைக்கும் பொழுது அது சமுதாயத்தின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வியிலும், சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய மாவட்டம் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டம் என்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.
இன்றைய நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கடையால் பேரூராட்சி, தாட்கோ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு நலத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), தமிழ்நாடு தொழில் வணிகத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி, வேளாண் பொறியியல் துறை, ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் வாயிலாக 2777 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. 135 பயனாளிகளுக்கு நேரிடையே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கான உணவும் தயார் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக அனைத்துதரப்பட்ட மக்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் நம்முடைய முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் வீடு கட்டுவதற்கு அடிப்படையாக இருக்க வேண்டியது பட்டா. பன்னெடுங்காலமாக வனங்களில் இருக்க கூடியவர்களுக்கு பட்டா வழங்குவது என்பது கடினமான ஒன்றாகும். ஆனால் நம்முடைய மாவட்டத்தில் அப்படி பட்டவர்களையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் வன உரிமை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பான முயற்சியை மேற்கொண்ட நம்முடைய மாவட்ட ஆட்சியாளரை பாராட்டுகிறேன். இவ்வாறு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
அதனைத் தொடர்ந்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வட மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.47 லட்சம் மதிப்பில் நிவாராணப்பொருட்களை 4 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, முன்னாள் அமைச்சர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் (குளச்சல்) , தாரகை கத்பர்ட் (விளவங்கோடு) மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ விருந்தில் கலந்து கொண்டு உணவு அருந்தினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சிவகாமி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹூ முகம்மது நசீர், உதவி இயக்குநர் சாந்தி (ஊராட்சிகள்), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், நகர்ப்புற வீட்டுவசதி வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல்முருகன், துணை இயக்குநர்கள் லதா (வேளாண் பொறியியல்), துணை இயக்குநர் ஷீலா ஜாண் (தோட்டகலைத்துறை), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாரதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பெர்பெட், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெங்கின் பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் (பொ) பாரதி, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், கோகிலா வாணி அகஸ்டீனா, செல்வகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் சரவணன், தோவாளை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பூதலிங்க பிள்ளை, வட்டாட்சியர் முருகன் (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), சஜித் (கல்குளம்), ராஜசேனர் (கிள்ளியூர்), கந்தசாமி (திருவட்டார்), துறை அலுவலர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு பணியாளர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.