கன்னியாகுமரி மாவட்டத்தில் 11.3.2025 அன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் கடல் பகுதிகளில் கால் நனைக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் எனவும், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட TN-Alert என்ற செயலியின் வழியாக மழையின் விபரங்களை தெரிந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கேட்டுக் கொள்கிறார்.