தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் 2024–2025-ம் ஆண்டிற்கான அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு
கேடயம் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலங்கோடு அரசு நடுநிலைப் பள்ளி, ஈத்தாமொழி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் கடியப்பட்டணம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்
துறை அமைச்சரால் நாளை(14 ம் தேதி) காரைக்குடி அழகப்பா மாதிரிமேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் கேடயம் வழங்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது
