கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Share others

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பகவான் வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு 4.3.2026 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 4.3.2026 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2026 மார்ச் திங்கள் முதலாவது சனிக்கிழமை (7.3.2026) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 10.3.2026 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
10.3.2026 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2026 மார்ச் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (14.3.2026) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். 4-3-2026 மற்றும் 10.3.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உத்தரவிட்டு உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *