கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்து உள்ளது. அதேபோல் குளங்கள் மற்றும் கிணறுகள் போன்றவற்றின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டமாக சிற்றாறு ஒன்று 11.28 அடியாகவும், சிற்றாறு இரண்டு 11.38, பேச்சிப்பாறை 18.87, பெருஞ்சாணி 37.90, பொய்கை 10, மாம்பழத்துறையாறு 3.28, முக்கடல் -11.30 அடியாகவும் இருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு 614 கன அடி தண்ணீர் உள்வரவாக வந்து கொண்டிருக்கிறது. 583 கன அடி தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு 385 கன அடி தண்ணீர் உள்வரவாகவும் 200 கன அடி தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. முக்கடல் அணையில் இருந்து 8.6 கன அடி தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது.