நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில்
இன்று நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில்
மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில் இன்று (15.8.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கலந்து கொண்டு, தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்கள்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நீர்வளத்துறை, நில அளவை பதிவேடுகள்துறை, உணவு பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கைத்தறி, வேலைவாய்ப்புத்துறை, விளையாட்டுத்துறை, கருவூலத்துறை, சுகாரதாரத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரிந்த 310 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மகன்களை ராணுவ சேவைக்கு அனுப்பி வைத்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 16 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டியும், 6 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களும், தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை சார்பில் நீண்ட நாட்கள் வாடாத விலை மதிப்பு உள்ள பூச்செடிகளை பயிரிட்டு பிற மாநிலத்திற்கு அனுப்பி வைத்தமைக்காக ஒரு பயனாளிக்கு சிறந்த விவசாயி என பாராட்டு சான்றிதழும், பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு பனைமதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைக்க ரூ.50,000 மானியமும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு தென்னை பரப்பு விரிவாக்கத்திற்கு ரூ.15,600 மானியமும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.150 மானியமும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.800 மானியமும் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.250 மானியமும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.8,94,814 மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்.
மேலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முன்மாதிரி கிராம ஊராட்சிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருதன்கோடு மற்றும் பாலூர் ஊராட்சிகளுக்கு தலா ரு.7.50 லட்சம் பணமுடிப்பு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குதலில் சிறப்பாக செயல்பட்ட இரவிப்புதூர்கடை இந்தியன் வங்கி கிளைக்கு முதல் பரிசாக ரூ.15,000 மற்றும் தக்கலை கனரா வங்கி கிளைக்கு இரண்டாம் பரிசு ரூ.10,000, வடிவீஸ்வரம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பசுமை முதன்மையாளர் விருது மணிகெட்டிப்பொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி நேச்சர் பவுண்டேஷன் மற்றும் நாகர்கோவில் நிமிர் சாரிட்டபில் டிரஸ்ட் ஆகியவைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து 17 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்து எந்த உபகரணம் இல்லமால் நீச்சல் அடித்து தானாக மீண்டு வந்துள்ள பள்ளம் பகுதியைச் சார்ந்த சூசை மரியானின் வீர செயலினை பாராட்டி பாராட்டு சான்றிதழும், மருத்துவத்துறை சார்பாக கிராமப்புற சுகாதார சேவையில் குடும்ப நலத் திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த எட்டு பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயமும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவக் மருத்துவமனை, ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகிய மருத்துமனைகளுக்கு பாராட்டு சான்றிதழும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய நான்கு காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
அதனைத்தொடர்ந்து மைலோடு விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி கார்மல் மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி காமரின் சர்வதேச மேல்நிலைப்பள்ளி, நெய்யூர் மௌவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.
நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வன அலுவலர் பிராசாந்த், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பாபு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா,, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் காளீஸ்வரி (நாகர்கோவில்), தமிழரசி (பத்மநாபபுரம்), தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் (பொ) செந்தில்வேல் முருகன், டாஸ்மாக் பொது மேலாளர் சங்கரலிங்கம், உதவி ஆணையர் (கலால்) லொரைட்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ராஜேஷ், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, துணை இயக்குநர் (பொது சுகாதாரப்பணி) மீனாட்சி, இணை இயக்குநர்கள் ஆல்பர்ட் ராபின்சன் (வேளாண்மை), இராதாகிருஷ்ணன் (கால்நடைத்துறை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜென்கின் பிராபகர், இணை பதிவளார் கூட்டுறவு துறை சிவகாமி, துணை இயக்குநர்கள் ஷீலா ஜாண் (தோட்டக்கலைத்துறை), வாணி (வேளாண்மை விற்பனை), கீதா, சில்வெஸ்டர் சொர்ணலதா, வட்டாட்சியர்கள் முருகன் (கல்குளம்) கோலப்பன் (தோவாளை), புரந்தரதாஸ் (திருவட்டார்), ஜூலியன் ஹூவர் (விளவங்கோடு), ராஜசேகர் (கிள்ளியூர்), உசூர் மேலாளர் சுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் கண்ணன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
.