கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000- (ரூபாய் ஆயிரம்) பெறுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.8.2024 (சனி) முதல் 19.8.2024 (திங்கள்) மற்றும் 20.8.2024 (செவ்வாய்) ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் உடனே மனுக்களை கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப் (“what’s up“) செயலியில் பொய்யான தகவல் பரவி வருகிறது. பொதுமக்கள் இந்த பொய் தகவலை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இது போன்ற பொய் தகவல்களை பரப்புவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.