கல்வி கடன் முகாம்

Share others

கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் சார்பில்,
சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில்
39 மாணாக்கர்களுக்கு ரூபாய் 2.57 கோடி மதிப்பீட்டிலான
கல்வி கடன் ஆணைகளை
மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில் மாணாக்கர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கி தெரிவிக்கையில்,

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் இரண்டு சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, அதன் தொடக்கமாக இன்றைய தினம் சிவகங்கையில் சிறப்பு கல்வி கடன் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இம்முகாமினை முன்னிட்டு நாளாது தேதி வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு, அந்தந்த வங்கிகளினால் அனுமதிக்கப்பட்டு அதன்படி இன்றைய தினம் மொத்தம் 39 மாணாக்கர்களுக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 37 மாணாக்கர்கள் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். தகுதியான மாணாக்கர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை இரண்டு வாரங்களில் கிடைக்க செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று வருகின்ற 8.9.2023 அன்று காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்திலும் மாவட்ட அளவிலான சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது. எனவே தற்போது பயன்பெற்றுள்ள மாணாக்கர்களும், தங்களை சார்ந்தோர்களிடம் எடுத்துரைத்து, பயன்பெற செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மேலும் கல்வி கடன் பெற்றுள்ள மாணாக்கர்கள், இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கடன்களை சரிவர செலுத்தி, சிறப்பாக பயின்று தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் சிவகங்கை சுற்று வட்டாரத்தில் இயங்கும் 18 வங்கிகளின் மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணாக்கர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *