காமராஜர் பிறந்த நாள் விழா மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

Share others

நாடார் மஹாஜன சங்கம் நடத்தும் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் கல்வித் திருவிழா கன்னியாகுமரி மாவட்ட அளவிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கலைக்கல்லூரியில் வைத்து நாடார் மகாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பேச்சுப் போட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது. அதன்படி 6,7,8 ம் வகுப்பு மாணவர்களுக்கான தலைப்பு கல்வி புரட்சியில் காமராஜர் அல்லது வேளாண்மை வளர்ச்சியில் காமராஜர் என்ற தலைப்பிலும், 9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தலைப்பு புதிய வரலாறு படைத்த புனித தலைவர் காமராஜர் அல்லது காமராஜரின் சிந்தனைகளும் செயல்களும் என்ற தலைப்பிலும், 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தலைப்பு நாட்டின் உலகளாவிய வளர்ச்சியில் காமராஜர் அல்லது காமராஜரின் எளிமையும் வலிமையும் என்ற தலைப்பிலும் நடந்தது. முதல் பரிசு ரூ. 7,000, 2 ம் பரிசு ரூ.5,000, 3 ம் பரிசு ரூ.3,000 என்று ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் முதல் மற்றும் 2 ம் இடம் பெறுபவர்கள் 14-7-2025 அன்று விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர். மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 50,000, 2 ம் பரிசு ரூ .30,000, 3 ம் பரிசு ரூ. 20,000 என வழப்பட உள்ளது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் தனபால், ஐசக் சாம்ராஜ், குமரி மாவட்ட தலைவர் முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் இணைந்து செய்து இருந்தனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *