கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 8-ம் திருவிழாவான பாதுகாவலர் பெருவிழாவில் அன்பின் விருந்து நடந்தது. விழாவில் இன்று (21-ம் தேதி) காலை 6 மணிக்கு திருமுழுக்குத் திருப்பலி, காலை 10 மணிக்கு காரங்காடு புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பிக்கும் சிறப்புத் திருப்பலி நடந்தது. திருப்பலியில் குழித்துறை மறைமாவட்ட பள்ளிகள் கூட்டாண்மை மேலாளர் அருட்பணி டோமினிக் கடாட்சதாஸ் தலைமை ஏற்று அருளுரை வழங்கினார்.
மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து நட்டாலம் புனித தேவசகாயம் திருத்தல அதிபர் அருட்பணி பால்ரிச்சர்ட் ஜோசப் தலைமையில், முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய இயக்குனர் அருட்பணி ஜாண் ராபர்ட் கென்னடி அருளுரையில் திருப்பியும் நடந்தது. இரவில் அன்பின் விருந்தும் நடந்தது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அரிசி, மசாலா, காய்கறிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆட்டுகிடா கறியுடன் விருந்து நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறை மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.