காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 247 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 13 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவின் முதல் நாள் காலையில் திருப்பலி முன்னோருக்காகவும், ஆலயத்திற்கு நிலம் தானம் வழங்கியவர்களுக்காகவும் நடந்தது. அதன் பிறகு புனித ஞானப்பிரகாசியார் ஏழை குடில் திட்ட வீடு திறப்பு விழா நடந்தது. மாலையில் கொடிப் பவனி, செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி அருட்பணி விக்டர் தலைமையில் நடந்தது. இரவில் பொதுக்கூட்டம், பரிசு வழங்கல், இறை கீதங்கள், காரங்காடு இசைக் கலைஞர்கள் குழு பாடல் போட்டியும் நடந்தது. விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் செபமாலை, திருப்பலி நடந்தது . 3 ம் நாள் விழாவில் காலையில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, மாலையில் நற்கருணை ஆசீர், இரவு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடந்தது. 4 ம் நாள் விழாவில் மாலையில் செபமாலை, திருப்பலி குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடந்தது. இரவில் அன்பியங்களுக்கு இடையேயான நாடகப் போட்டி நடந்தது. 8 ம் நாள் விழாவில் காலையில் திருமுழுக்கு திருப்பலி நடந்தது. இரவில் அன்பின் விருந்து நடந்தது. 9 ம் நாள் விாவில் காலையில் முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலியும், 10:30 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடந்தது. மாலையில் ஜெபமாலை, திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர், இரவில் பாதுகாவலரின் சிறப்பு தேர்ப்பவனி, நாதஸ்வர இசையும் நடந்தது. 10 ம் நாள் விழாவில் காலையில் முதல் திருப்பலி, 8 மணிக்கு திருவிழா திருப்பலி மறைமாவட்ட செயலர் பேரருட்பணி அந்தோணி முத்து தலைமையில் நடந்தது, 10 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி, மாலையில் திருக்கொடியிறக்கம், இரவு புனித அந்தோணியார் வரலாற்று நாடகமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, பங்குத்தந்தை அருட்பணி சுஜின், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜெய்சன், செயலாளர் மேரி ரெக்செலின், துணை செயலாளர் ஜோஸ்பின் ஷீபா, பொருளாளர் சேவியர் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.
காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலய திருவிழாவில் தேர்பவனி
