கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 246 வது பங்கு குடும்ப விழா ஜூன் மாதம் 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 23 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. பத்தாம் நாள் விழாவில் காலையில் குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருவிழா சிறப்புத் திருப்பலி நடக்கிறது. விழாவின் முதல் நாள் (14-ம் தேதி) காலையில் திருப்பலி, மாலையில் திருக்கொடி பவனி, ஜெபமாலை, குழித்துறை மறைமாவட்ட தலைமைச் செயலர் பேரருட்பணி அந்தோணி முத்து தலைமையில், முட்டம் மறைவட்ட முதன்மை பணியாளர் அருட்பணி ஸ்டான்லி சகாய சீலன் அருளுரை வழங்க திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடந்தது. அனைத்து அன்பியங்களும் சிறப்பித்தனர். இரவில் பொதுக்கூட்டம், பரிசு வழங்குதல் ஆகியவை நடந்தது.
2 மற்றும் 4, 5, 6, 7-ம் நாள் விழாக்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள், நாடகம், பாடல், நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. 3-ம் நாள் திருவிழாவில் 16-ம் தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி, காலை 9.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, பிற்பகல் 3 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது.
8-ம் நாள் திருவிழாவான புனித ஞானப்பிரகாசியார் பாதுகாவலர் பெருவிழாவில் 21-ம் தேதி காலை 6 மணிக்கு திருமுழுக்குத் திருப்பலி, காலை 10 மணிக்கு சிறப்புத் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து நட்டாலம் புனித தேவசகாயம் திருத்தல அதிபர் அருட்பணி பால்ரிச்சர்ட் ஜோசப் தலைமையில், முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலை இயக்குனர் அருட்பணி ஜாண் ராபர்ட் கென்னடி அருளுரையில் திருப்பலி, இரவு 8 மணிக்கு அன்பின் விருந்தும் நடக்கிறது.
9-ம் நாள் திருவிழாவில் 22-ம் தேதி காலை 7.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமையில் முதல் திருவிருந்து சிறப்புத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்புகழ்மாலை, நற்கருணை ஆசீர், இரவு 10 மணிக்கு பாதுகாவலரின் சிறப்புத் தேர்ப்பவனியும், நாதஸ்வர இசையும் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவில் 23-ம் தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமை ஏற்று அருளுரை வழங்கும் திருவிழா சிறப்புத் திருப்பலியும், தொடர்ந்து காலை 10 மணிக்கு புனிதரின் திருத்தேர் பவனியும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு புனித ஜார்ஜியார் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது.
திருவிழா முன் ஏற்பாடாக 12ம் தேதி, 13ம் தேதிகளில் மாலையில் சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி தாளாளர் அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் வழி நடத்தும் நற்செய்தி கொண்டாட்டம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை காரங்காடு ஆலய பங்குத்தந்தை அருட்பணி சுஜின், பங்குப் பேரவை துணைத் தலைவர் ஜெய்சன், செயலாளர் மேரி ரெக்செலின், பொருளாளர் சேவியர் ஜார்ஜ், துணைச் செயலாளர் ஜோஸ்பின் ஷீபா, பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.