குழித்துறைமறை மாவட்டம் காரங்காடு மறைவட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் காரங்காட்டில் வைத்து நடந்தது. காரங்காடு வட்டார செயலாளர் ஜோஸ்லின் அமுதா ஒளியேற்றுதல் முன்னுரை வாசித்தார். காரங்காடு வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ் வரவேற்றார். கிட்ஸ் இயக்குனர் அருட்பணி மார்டின் வாழ்த்துரை வழங்கினார். குழித்துறை மறைமாவட்டம் குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் முன்னிலை வகித்தார். பிலாவிளை பங்குத்தந்தை அருட்பணி ஆல்வின் விஜய் பாடல் பாடினார். 3 ம் நிலை நூலகர் ஆரோக்கிய ராஜேஷ் சிறப்புரை ஆற்றினார். அருட்பணி சுனில் உரையாடல் நடத்தினார். தொடர்ந்து குழித்துறை மறைமாவட்டம் மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நலம் நாடுவோருக்கான இறைவேண்டல் நடந்தது. காரங்காடு வட்டார துணை செயலாளர் பிறீத்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கப்பட்டது. விழாவில் அருட்பணியாளர்கள், பங்கு அருட்பணி பேரவையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காரங்காடு மறைவட்டாரம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம்
