பிம்போ குழுவின் சார்பாக 40வது மாவட்ட அளவிலான சுதந்திரதின கால்பந்தாட்ட போட்டி ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி மைதானத்தில் நடந்தது. துவக்க போட்டியை பாஸ்டர் ஜாண் பீட்டர் ஜெபம்
செய்தார். பாஸ்டர் ஜெயசிங்ராஜா மற்றும் சிஎஸ்ஐ பேராய மாமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரா போட்டியை
ஆரம்பித்து வைத்தார். குமரி மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் கலந்து கொண்டன. இறுதி ஆட்டத்தில் ஸ்டேடியம் எப்சி
அணியும், ஜாலி பிரண்ட்ஸ் எப்சி அணியும் மோதியது. இதில் ஸ்டேடியம் எப்சி அணி வெற்றி
கண்டு முதல் இடத்தை பிடித்தது. பரிசளிப்பு விழாவிற்கு பிம்போ குழுவின் தலைவர் .பாரத் வில்சன்
தலைமை தாங்கினார். முதல் இடத்தை பெற்ற ஸ்டேடியம் எப்சி அணியினருக்கு சுழற்கோப்பையை மேற்கு மாவட்ட
காங்கிரஸ் முன்னாள் தலைவர் தாரகை கத்பட் வழங்கினார், இரண்டாம் இடத்தை பெற்ற ஜாலி பிரண்ட்ஸ் எப்சி அணியினருக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதா கிருஷ்ணன் சுழற்கேடயத்தை
வழங்கினார், தனிநபர் பரிசுகள் மற்றும் சிறப்பு பரிசுகளை ராஜீவ் காந்தி பஞ்சாயத்தி ராஜ் சங்கதன் ,
கன்னியாகுமரி மாவட்ட தலைவர் அஜிகுமார், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சாம்சன் டேவிஸ்,
நாகர்கோவில் மாநகராட்சி 5வது வார்டு காங்கிரஸ் தலைவர் லஜன் சாம் டேனியல், நாகர்கோவில் நகர,
காங்கிரஸ் துணை தலைவர் ஷானா கான், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர்
சாந்தி ரோஸ்லின், ஜரின் சேகர், மாவட்ட சிறுபான்மை தலைவர் முகைதீன் சாகுல், டேக்
வாண்டோ தலைவர் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். இந்த போட்டிக்கான
முதல் பரிசுகளை டேவிட் திலக் வில்சன் அன்பளிப்பாக வழங்கினார். இந்த போட்டி ஆட்டத்திற்கு
நடுவர்களாக கோவை மாவட்டத்தை சார்ந்த ஐசக், லூயிஸ், நாகராஜ் மற்றும் பக்தவல்சலம் செயல்பட்டார்கள்.
இப் போட்டிக்கான ஏற்பாடுகளை பிம்போ குழுவை சார்ந்த ரோஸ், ஜெகன், செல்வன்,
ஜெரிஷ், .எபினேஷ் பால், .சுனில், சுதன் ஆகியோர் செய்து இருந்தனர். பரிசளிப்பு விழாவின்
முடிவில் செயலாளர் ஆல்பர்ட் ராஜ்குமார் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை ஏராளமான கால்பந்தாட்ட
ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் கண்டு ரசித்தனர்.