தென்னக ரயில்வே இரணியல் ரயில் நிலைய விரிவாக்க பணியின் புனரமைப்பு செய்து உயர்த்தப்பட்ட ஆத்திவிளை ஊராட்சி பரம்பை பகுதியில் உள்ள வடிகால் பாலத்தை கோதையாறு வடி நில கோட்ட உதவி செயற்பொறியாளர் லாரன்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, இரணியல் கிளைக் கால்வாய் பிரிவு தலைவர் சுந்தர் ராஜ், கடைமடை பாசனத்துறை தலைவர் ஜேசுதாஸ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா மற்றும் காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ஜேக்கப் அருள் பால் ஆகியோர் உடனிருந்தனர்.