கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகைப் பயிற்சி நடந்தது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி ஒத்திகை நடந்தது. இதில் சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தை எவ்வாறு முறையாக கலைந்து போக செய்வது என்று செய்முறை ஒத்திகைப் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியின் போது காவலர்களுக்கு ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் லத்தி, கண்ணீர் புகை குண்டுகள் , துப்பாக்கி முறையாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஒத்திகைப் பயிற்சியின் போது வருண், வஜ்ரா வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.