‘கியூ ஆர்’ பண பரிவர்த்தனை கார்டு வணிகர்களுக்கு தபால்துறை அழைப்பு
தபால்துறையின் போஸ்டல் பேமென்ட் வங்கியில் கணக்கு துவக்கி, கியூ ஆர் கார்டு பெற்று கொள்ளலாம் என வணிகர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது.
மத்திய அரசு ‘டிஜிட்டல்’ முறையிலான பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு இணையான ‘டாக் பே’ ‘எனும் ‘கியூ ஆர் கோடு’ மூலம் எளிய பண பரிவர்த்தனை முறையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சாலையோர சிறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் வரை அனைத்து வணிகர்களும் வாடிக்கையாளர்களிடம் இருந்து, பண பரிவர்த்தனை செய்ய முடியும். இதற்காக இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்கில் அனைத்து வணிகர்களும் கட்டணமின்றி ‘வர்த்தக கணக்கு துவக்கி, ‘கியூ ஆர்கார்டு’ பெற்று கொள்ளலாம்.
குமரி அஞ்சல் பகுதிகளில் தற்போது இந்த ‘டாக் பே’ வசதி அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான கியூ ஆர் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து தகவல் பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையம், தபால்காரர் அல்லது இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க் கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.