கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ரூபாய் 2.90 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தார், கான்கிரீட், பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணிகள், குடியிருப்பு, பள்ளி கட்டிடங்கள், பயணிகள் நிழற்குடை கழிவறைகள்,அங்கன்வாடி மற்றும் ஊராட்சி அலுவலக கட்டிடங்கள் மேல்நிலை நீர் தேங்கத் தொட்டி விவசாய நிலங்களில் வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 32.50 லட்சம் மதிப்பில் மத்திக்கோடு முதல் குறண்டி குளம் வரை முடிவுற்ற கான்கிரீட் சாலை பணியினையும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 9.90 லட்சம் மதிப்பில் குரண்டிக்குளம் முதல் 130 மீட்டர் நீள அளவில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் சிமெண்ட் தளப்பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு சிமெண்ட் கலவையின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூபாய் 4.50 லட்சம் மதிப்பில் மத்திக்கோடு அரசு தொடக்கப்பள்ளி மேற்கு பகுதியில் ரூபாய் 3.90 லட்சம் மதிப்பில் கிழக்குப் பக்கத்திலும் புனரமைக்கப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்ததோடு அதை உறுதி தன்மையோடு கட்டுவதற்கு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 13.16 லட்சம் மதிப்பில் குடியிருப்புடன் கூடிய பொது விநியோக திட்டக் கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் ரூபாய் 80 ஆயிரம் மதிப்பில் விவசாயிகளுக்கு வேளாண் வரப்பு அமைக்கும் பணியிணையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திப்பிறமலை ஊராட்சியில் முதல் அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3.0 லட்சம் மதிப்பில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3.75 லட்சம் மதிப்பில் திப்பிறமலை அரசு தொடக்கப்பள்ளி கிழக்குப் பக்கம் கட்டிடம் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில் சமையலறை மேற்கூரை ரூபாய் 3.0 லட்சம் மதிப்பில் மேற்குப் பக்கம் இரண்டு கட்டிடங்கள் ரூபாய் 0.95 ஆயிரம் மதிப்பில் மூன்று கழிவறைகள் புனரமைக்கப்படும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மழைக்காலத்தில் மழை நீர் உட்புகாதவாறு மேற்கூரை அமைத்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முள்ளங்கினாவிலை ஊராட்சிக்கு உட்பட்ட சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொல்லஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட சுற்றுச்சூழல் கேட் மற்றும் தரை அலங்கார கற்கள் பதிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் திட்டத்தின் கீழ் ரூபாய் 23.6 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கொளஞ்சி ஊராட்சி அலுவலக கட்டிடத்தினை பார்வையிட்ட போது அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மிடலாம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் கட்டுப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம் பணிகள் ரூபாய் 11.97 லட்சம் மதிப்பில் மங்கலகுன்று பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் (ஜல் ஜீவன் மிஷன்)கீழ் கானாவூர் பகுதியில் ரூபாய் 13 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட உயர்மட்ட நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கிளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் 2.90 கோடி மதிப்பில் நடைபெற்ற வரும் வளர்ச்சி திட்ட பணிகள் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.