குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( மார்ச் 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம்.
1968 ம் ஆண்டு மாதம் இருமுறை வெளிவரும் வகையில் குமரி குரல் பத்திரிகையை தொடங்கி திறம்பட நடத்தி வந்துள்ளார். பத்திரிகை மூலம் மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், பொது பிரச்சனைகள், தேவைகள் என்று பல கோணங்களில் சுட்டி காட்டி நிவாரணம் அடைய செய்து உள்ளார். நிவாரணம் அடைந்தவர்களின் பாராட்டை பெற்றுள்ளது. பல சவால்களை கடந்து வந்த பத்திரிகையாக வலம் வர செய்து வந்த நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவுகளுடன்… 1968 ம் ஆண்டு தொடங்கப்பட்ட குமரி குரல் பத்திரிகை தற்போது 57 வது ஆண்டாக எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் அன்று போல் அதே குறிக்கோளோடு வெளிவந்து கொண்டிருக்கிறது.