கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் மாதம் 15 ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்தார். இதில் தகுதியானவர்களுக்கு ரூ.1000 கிடைத்தது . இந்த உரிமைத் தொகை கிடைத்த பெண்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதேநேரத்தில் விண்ணப்பித்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 18 ம் தேதி முதல் குருஞ்செய்திகள் வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் குருஞ்செய்திகளை எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பலருக்கு குருஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான குருஞ்செய்தியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களது விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை என வந்துள்ளது. இந்த குருஞ்செய்திகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத மகளிர்கள் வேதனை மேல் வேதனை அடைந்து வருகின்றனர். விண்ணப்பம் கொடுக்கும் போது விண்ணப்பம் வாங்கும் முகாமில் அனைத்து சரிபார்த்தே வாங்கினார்கள். அதன்பிறகு கள ஆய்வு என்று வந்தவர்கள் அனைத்தும் சரியாக தான் இருக்கிறது என்று தான் தெரிவித்தார்கள் அதன்பிறகு எப்படி குருஞ்செய்தி இப்படி வந்திருக்கிறது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.