தொகுதி IV (குரூப் 4) தேர்வு நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்தாலோசனை நடத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், தலைமையில் இன்று (08.05.2024) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி IV (குரூப் 4) தேர்வு முன்னெற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி IV தேர்வு 9.6.2024 அன்று நடைபெற உள்ளது. மேற்படி தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 212 தேர்வு மையங்களில் 60,095 விண்ணப்பதார்கள் தேர்வு எழுத உள்ளனர். தொகுதி IV தேர்வு தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், தேர்வை எதிர் கொள்வது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் காளீஸ்வரி (நாகர்கோவில்), தமிழரசி (பத்மனாப்புரம்), மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்திய குமார், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, வட்டாட்சியர்கள் அனில்குமார் (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), முருகன் (கல்குளம்), புரந்தரதாஸ் (திருவட்டார்), ராஜசேகர் (கிள்ளியூர்) குமாரவேல் (விளவங்கோடு) உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
.