குளச்சல் ஆழ்கடலில் விசைப்படகில்உலக மீனவர் தினம் கொண்டாட்டம்

Share others

குளச்சல் ஆழ்கடலில் விசைப்படகில் உலக மீனவர் தின கொண்டாட்டம்

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க செல்வன் முன்னிலையில் உலக மீனவர் தினம் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் மீனவர் தினம் கேக் வெட்டியும், மீனவ தலைவர்களின் திருவுருவ படங்களின் மீது உறுதிமொழி எடுக்கப்பட்டு, கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான மீனவப் பெண்களும் குழந்தைகளும் மீனவர்களும் கலந்து கொண்டனர். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க செயலாளர் ஆரோக்கியராஜ் ஒருங்கிணைப்பாளர் ரெக்சன், துணைச் செயலாளர் சேவியர், தெற்காசியர் மீனார் தோழமை குறும்பனை பொறுப்பாளர்கள் பிரெடி மற்றும் சுரேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

கடல் அன்னைக்கு மலர்தூவி மரியாதை

மீனவர்கள் குடும்பத்தோடு விசைப்படையில் குளச்சல் ஆழ்கடலுக்கு சென்று மீனவர்களுக்கு என்றென்றும் வாழ்வாதாரமாய் இருக்கின்ற கடல் அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மீனவ தலைவர்களின் உருவ படத்தின் மீது உறுதிமொழி

தமிழக மீனவர்களின் முன்னோடி தலைவரான சென்னை சிங்கராவேலர், ஜாதியால் பிரிக்கப்பட்ட மீனவர்களை மீனவர் என்ற இனத்தால் ஒன்றிணைத்த சென்னையின் ஜீவரத்தினம், தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராகிய குளச்சல் லூர்தம்மாள் சைமன், இந்திய மீனவர்களுக்கு உலக அளவில் மீனவர் தின விழா பெற்றுத் தந்த கேரளா பாதிரியார் தாமஸ் கொச்சேரி, மீனவர்களுக்கு ஆளுமை கற்றுத்தந்த தூத்துக்குடி குரூஸ் பெர்னாண்டஸ், மீனவ இளைஞர்களை பொறியாளர்கலாக்கிய முட்டம் ஜேப்பி ஆர், உள்நாட்டு மீனவர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்த சேலத்தில் சின்னாண்டி பக்தர் ஆகியோர்களின் திருவுருவப்படத்தின் மீது மீனவர்கள் குடும்பமாக ஆழ்கடலையின் கடல்வாழ் மீன் இனங்களையும் அழிக்கக்கூடிய ஆழ்கடலில் 28 பகுதிகளில் எரிவாய் மற்றும் எண்ணெய் கிணறுகளுக்கு சர்வதேச ஒப்பந்தம் அளித்ததையும் ; நான்கு லட்சம் கோடி முதலீட்டில் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் கடலுக்கு அடியிலும் கடற்கரையிலும் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளதையும் ; கன்னியாகுமரி மாவட்டத்தில் 1144 ஹெக்ட்டர் நிலத்தில் தாது மணல் எடுப்பதற்கு இந்திய அரிய மணலாலை நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் கடலையும் கடல் வாழ் உயிரினங்களையும் இயற்கையையும் காத்திட ஒன்றிணைந்து செயல்படுவது என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

உலக மீனவர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆழ் கடலில் விசைப்படகிலே மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கையொப்பமிட்டு படகு மூலம் அனுப்பி வைத்தனர்.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் கூறியதாவது:

ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டம்

கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டம் படுகைக்கரைப் பகுதியில் (வாட்ஜ் பேங்க்) இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடலில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு ஹைட்ரோ கார்பன் அகழ்வு மற்றும் உரிமம் கொள்கையின் கீழ் விருப்ப மனுக்களை கோரியிருந்தது ஒன்றிய எரிசக்தி இயக்குநரகம் சார்பாக

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி அடிப்படையில் 9 வது சற்று ஏலம் அண்மையில் விடப்பட்டிருக்கிறது இதில் நாடு முழுவதும் 28 பகுதிகளில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 596 சதுர கி மீ ஏலம் விடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் மூன்று தொகுதிகளும், சென்னைக்கு அருகே ஆழ்கடலில் ஒரு தொகுதியும் இதில் அமைந்து உள்ளன. மொத்தம் 32 ஆயிரத்து 485.29 சதுர கி மீ பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு ஏலம் விடப்பட்டது. கடந்த 3/1/2024 அன்று கண்ட இடங்களில் ஆய்வு மற்றும் உற்பத்தி கிணறுகள் அமைக்க சர்வதேச டென்டர் விடப்பட்டது.
உலகம் முழுக்க வெகுசில படுகை கரைகளே உள்ள நிலையில் அவற்றுள் ஒன்று கன்னியாகுமரியின் தென்மேற்கு கடல் பகுதியில் உள்ளது 10 ஆயிரம் சதுர கி மீ பரப்பளவு கொண்ட இந்த படுகைக்கரை இந்தியவின் மீன்வள சுரங்கமாக திகழ்ந்து வருகிறது. இங்கு பலமான நீரோட்ங்களோ, அலைகளோ, வெள்ளப்பெருக்கோ ஏற்படுவது இல்லை என்பதால் மீன்களுக்கு தேவையான உணவுகள் உற்பத்தியாகின்றன ஏராளமான பவளபாறைகள் படிந்திருக்கும் இடப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட மீன் வகைகளும் 60 க்கு மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்களும் வாழ்கின்றன மீன்களும் பிற கடல் வாழ் உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் இது விளங்குகிறது. இந்த பகுதியில் எரிவாய் மற்றும் எண்ணெய் கிரகங்கள் அமைக்க சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் ஆழ்கடல் மீனவர்களின் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு மீனவர்கள் தங்களது சொந்தக் கடலிலிருந்தே அப்புறப்படுத்தப்படும் சூழல் உருவாகும்.

கரைகடலில் மற்றும் கடலுக்கடியில் காற்றாலை
4 லட்சம் கோடி முதலீட்டில் அடுத்த ஏழு ஆண்டுகளில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இந்தியாவின் முதல் கடல்வழி காற்றாலை ஆற்றலின் 4 ஜிடபிளியூ தமிழகக் கடற்கரையில் அமைக்க, கடலுக்கு அடியில் உரிமம் பெறுவதற்கான டெண்டரை வெளியிட்டு உள்ளது.
2030 ஆம் ஆண்டளவில், 58 ஜிகாவாட் காற்றாலை ஆற்றலின் கரையோரத்தில் இயக்கப்படும். ஒரு ஜிகாவாட் காற்றாலை மின் உற்பத்திக்கு சுமார் ரூ.7,000 முதல் ரூ.8,000 கோடி முதலீடு தேவைப்படுகிறது, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ள ஒன்பது மாநிலங்களில் இருந்து காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்கிடையில், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கடலோர காற்றாலை ஆற்றல் திறனைத் தட்டுகிறது மற்றும் மன்னார் வளைகுடாவில் உள்ள தமிழ்நாடு கடற்கரையில் ஒரு ஜிகாவாட் நிறுவும் திறன் கொண்ட 14 தளங்களை அடையாளம் கண்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கடற்பரப்பு உரிமத்திற்கான டெண்டர்கள் எடுக்கப்படும், அதில் வெற்றி பெற்ற ஏலதாரர் ஐந்து ஆண்டுகளில் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வார். முதல் கட்டத்தில், திறந்த அணுகல், கேப்டிவ், இருதரப்பு மூன்றாம் தரப்பு விற்பனை மற்றும் வணிகர் விற்பனை மூலம் 4 ஜிடபிளியூ மின்சாரத்தை குத்தகைக்கு எடுப்பதற்கான ஏலங்கள் இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாதுமணல் சுரங்கம் – ஐஆர்இஎல்
குமரிமாவட்டத்தில் கீழ்மிடாலம்-ஏ, மிடாலம்-பி, இனையம்புத்தன்துறை, ஏழுதேசம்- ஏ,பி,சி மற்றும் கொல்லங்கோடு-ஏ,பி வருவாய் கிராமங்களில் தாதுமணல் சுரங்கம் தோண்டுவதற்காக மொத்தமாக 1144.0610 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்தப்பகுதியில் 598.800 லட்சம் (59.88 மில்லியன் டன்) அளவிலான தாதுமணல் இருப்பதாக ஐஆர்இஎல் நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஒரு நாளைக்கு 5000 டன் வீதம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் டன் தாதுமணல் எடுக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஒரு வருடத்திற்கு 1,52,250 டன் தாதுமணல் சுத்திகரிக்கப்பட்டு கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட உள்ளது. இதேவேளையில், மணவாளக்குறிச்சியில் செயல்படும் தாதுமணல் பிரிப்பு அலகின் அரசு அனுமதித்து உள்ள தாதுமணல் சுத்திகரிப்பு அலகு 1,14,600 டன் (ஓராண்டுக்கு) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டு உள்ள 1,52,250 டன் உற்பத்தியாகும் என்பதற்கும் மணவாளக்குறிச்சி செயல்படும் தாதுமணல் சுத்திகரிப்பு ஆலையில் அளவான 1,14,600 டன்னை விட 37,650 டன் அதிகமாகும். இதேபோன்று, இந்த திட்டத்திற்கான நிலங்களில் உயரலைக்கோட்டிற்கும் தாழ்வலைக்கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதி வரம்பிற்கு உட்பட்ட 5.2946 ஹெக்டர் நிலமும், மண்டலம்-II-ல் 203.3491 ஹெக்டர் நிலமும், மண்டலம்-III-ல் 144.8439 ஹெக்டர் நிலமும் கையகப்படுத்தப்படும். இந்த பகுதிகள் நமது படகு நிறுத்தும் இடமாகவும், படகுகள் கட்டும் இடமாகவும் இருந்து வருகிறது. இதுகுறித்து குறிப்பாக மீனவ மக்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், தற்போது நாம் பயன்படுத்தி வரும் பகுதிகள் குறித்து கூறப்படாத போது இந்த திட்டம் இந்த பகுதியில் வரக்கூடிய அனைத்து கிராமங்களையும் அழிக்கும் திட்டமாகும்.
இத்திட்டம் வந்தால், நம் மீன்தொழில் செய்ய முடியாது. மணல் எடுக்கும் போது வெளிப்படும் கழிவுகளால் மீன்வளம் கெடும். அதிக அளவு கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது எல்லாவகையிலும் மீனவமக்களுக்கும், பிற கடலோர சமூகங்களுக்கும் மற்றும் மாவட்டத்திற்கும் எதிரான திட்டமாகும். மேலும், 6-9 மீ ஆழம் வரையில் தாதுமணலுக்காக கடற்கரை தோண்டப்பட உள்ளது. இது 10-15 மீ ஆழத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதிக்காது என அறிக்கை கூறுகிறது. ஆனால், தாதுமணல் அதிகமாக கிடைக்கும் போது 9 மீ அதிகமாக தோண்டப்படும் போது நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை முறையாக நடைமுறைப்படும் என்பதற்கு யாரால் உத்தரவாதம் தர முடியும்? சில மீட்டர்கள் தோண்டப்பட்டாலும் கூட அறிக்கையில் கூறப்பட்டுள்ள 10-15மீ ஆழத்தில் உள்ள நிலத்தடி நீர் அடுக்குகள் கெடும். இது மீனவமக்களுக்கு மட்டுமல்ல, கடற்கரையை ஓட்டியுள்ள அனைத்து கிராமங்களுக்கான பிரச்சினை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த திட்டம் கடற்கரையில் இருந்து 310 மீட்டர் மற்றும் 365 மீட்டர் தொலைவில் திட்டமிடப்பட்டு உள்ளது. சுமார் 11.2 கி.மீ நீளமுள்ள கடற்கரை பகுதி கையகப்படுத்தப்படும். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரையில் 16 சதவீத கடற்கரையை நாம் இழக்கக்கூடும். கடற்கரை மட்டுமல்ல கடற்கரை சார்ந்த சூழலியலையும் இழப்போம். இந்தப் பகுதிகளில் உள்ள மணல்மேடுகள், ஆமை முட்டையிடும் இடங்கள் பற்றியும் அறிக்கையில் கூறப்படவில்லை. இந்த திட்டத்திற்கு மிக அருகில், மிடாலம் பகுதியில் வரும் சுரங்கப்பகுதியில் இருந்து 120மீ தொலைவில் தாமிரபாணி ஆறு பாய்கிறது. இது கழிமுக சூழலியலுக்கும் கேடு விளைவிக்கும். இது ஓட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையையும் மற்றும் சமவெளி பகுதிகளையும் அழிப்பதற்கானத் திட்டம்.
இந்த மூன்று திட்டங்களையும் உடனடியாக அரசு கைவிட வேண்டும் மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு விரோதமான கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் அன்புக்கு எதிரான எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த கூடாது அவற்றை உடனடியாக கைவிட்டு கடலை கடல் வாழ் உயிரினங்களையும் உயிரினங்களையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார் மேலும் அவர் மீனவர்களுடைய ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு தேவையான திட்டங்களையும், உள்ளாட்சி அமைப்புகளில் மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தையும், வளைகுடா நாடுகளில் மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பையும், கடலோரத்தில் மீனவர்களுக்கு வசிப்பதற்காக உரிய செயல் திட்டங்களையும் அரசு உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
ஆழ் கடல் மீன்பிடித்தல்
ஆழ் கடல் மீனவர்களின் உயிர் பாதுகாப்பிற்கு சக்தி வாய்ந்த தொலை தொடர்பு மைய்யம், ரேடியோ டெலிபோன், கடல் ஆம்புலன்ஸ்.
நடுகடலில் பழுதடைந்து நிற்கும் விசை படகுகள், பைபர் படகுகள் கரைக்கு மீட்டு வர இழுவை படகு
ஆழ் கடலில் மாயமாகும் மீனவர்களை தேடி மீட்க மீட்பு வானவூர்தி
கடலோர காவல் குழுமம் , கடல் அமலாக்க குழு ஆகியவற்றில் தகுதி வாய்ந்த மீனவர்களை வேலைக்கு அமர்த்தல்
மீனவர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் உயிர் காப்பீடு மேன்மை படுத்துதல்
படகு கட்டும் மையம் , வலை பின்னும் ஆலை ஆகியவற்றை அரசு நடத்துதல் மற்றும் கண்கானித்தல்
ஒளி சுருக்கு மடி இரட்டை மடி காச்சா மூச்சா வலை, இழுவலை குஞ்சு மீன் ஆகிய மீன்பிடி முறையை ஒழுங்கு படுத்துதல்
உள்ளாட்சி பிரிதிநிதித்துவம்
கடற்கரை கிராமங்களில் 500 அதிகமான வாக்காளர்கள் உள்ள கிராமங்களை தனி உள்ளாட்சியாக உருவாக்குதல்
மாநகராட்சியில் உள்ளாட்சிகளையும், மீனவ கிராமங்களையும் இணைப்பதை தடுத்தல்
வளைகுடா மீன்பிடித்தல்
வளைகுடா நாடுகளில் மீன்பிடித்தல் வேலைக்கு அமர்த்தப்படும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வேலை ஒழுங்கு படுத்துதல்
வளைகுடா நாடுகளில் மீன்பிடி தோழிலுக்கு செல்பவர்கள் மாவட்டத்தில் பதிவு செய்தல்
வெளிநாடு வாழ் மீனவர்களுக்கு அயலக மீனவர் அடையாள அட்டை வழங்குதல்
வெளிநாடு வாழ் மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் அமல் படுத்துதல்
கடலோர பாதுகாப்பு
கடற்கரை ஒழுங்கு மேலாண்மை திட்டம் மீனவர்களின் மீன்சார்ந்த தொழில் மற்றும் குடியிருப்பிற்கு பாதுகாப்பு அளித்தல்
கடற்கரையிலும் கடற்கரை சார்ந்த பகுதியிலும் மணல் குவாரியை தடுத்தல்
புற்று நோய் அதிகம் பாதித்த கண்டியப்பட்டணம், முட்டம் மற்றும் பிற மீனவ கிராமங்களில் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை எடுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டல புற்று நோய் மருத்துவமனை அமைத்தல்
வெளிநாட்டு சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு விடுதலை வேண்டும்
பாகிஸ்தான் சிறையில் பத்து மாதங்களாக வாடும் குளச்சல், சென்னை, மேற்குவங்கம் 14 மீனவர்களுக்கு விடுவிக்க வேண்டும்
மூன்று மாதமாக பஹ்ரின் சிறையில் வாடும் இடிந்தகரை 28 மீனவர்களை விடுவிக்க வேண்டும்
இலங்கை சிறையில் தண்டனை கைதிகளாகவும், விசாரணை கைதிகளாகவும் அடைக்கப்பட்டு உள்ள என்பதுக்கு அதிகமான ராமநாதபுரம், தூத்துக்குடி மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
குவைத் சிறையில் 8 மாதமாக வாடும் ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க வேண்டும்
ஒன்பது மாதமாக சவுதி அரேபியா சிறையில் வாடும் முட்டோம் மற்றும் நாகபட்டணம் ஐந்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். இவ்வாறு அருட்பணி சர்ச்சில் தெரிவித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *