கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் திருக்கோயில் கொடை விழா மே மாதம் 14ஆம் தேதி துவங்கி 18 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலையில் இசைத்தட்டு பக்தி பாடல்கள், தீபாராதனை, விளையாட்டு போட்டிகள், மதியம் சமய வகுப்பு மாணவ மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மாலையில் தீபாராதனை, இரவில் சமய மாநாடு, கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசு வழங்குதல் நடந்தது . இதில் சமய வகுப்பு மாணவிகள் இறைவணக்கம் பாடினர். சமய வகுப்பு மாணவி மலர் கொடி வரவேற்றார். ஊர் தலைவர் ஜெகன் தலைமை வகித்தார். ஊர் துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜா, துணை பொருளாளர் ரெதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தக்கலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ஸ்ரீ பத்மநாபன் வாழ்த்துரை வழங்கினார். ஆன்மீக முரசு ஆதி குமார் கருத்துரை வழங்கினார். சமய வகுப்பு ஆசிரியர் சுகிதா நன்றி கூறினார். 2 ம் நாள் விழாவில் காலையில் சுப்ரபாதம், தீபாராதனை, துர்க்கா பூஜை, மதியம் தீபாராதனை, மாலை தீபாராதனை, இரவு இன்னிசை கச்சேரியும் நடந்தது. 3 ம் நாள் விழாவில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு தீபாராதனை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குலை வாழை கட்டுதல், மாலையில் 1008 திருவிளக்கு பூஜை, இரவில் தீபாராதனை, அன்னதானம், நையாண்டி மேளம், மாபெரும் மகுட கச்சேரி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடந்தது. 4 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு நையாண்டி மேளம், 9 மணிக்கு மகுட கச்சேரி, மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை, 2.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு தீபாராதனை,6.30 மணிக்கு பஜனை, இரவு 8 மணிக்கு நையாண்டி மேளம்,9 மணிக்கு நவீன வில்லிசை, 1 மணிக்கு அர்த்தசாம பூஜை நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் காலை 5 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு நையாண்டி மேளம், 9 மணிக்கு வில்லிசை, மதியம் 1 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 3.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், தலைவர் ஜெகன், துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜா, துணை பொருளாளர் ரெதீஷ் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.