கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் என்று வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை சிறைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றிய தகவல்கள் ஏதாவது பொதுமக்களுக்கு தெரியவந்தால் மாவட்ட கட்டுப்பாட்டு எண் 100 தகவல் தெரிவிக்கலாம் இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.