குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப்பள்ளயில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வருகை தந்த நீதிபதிகளை சிறப்புக் குழந்தைகள் பேண்ட் வாத்தியம் முழங்கவரவேற்றார்கள். தொடர்ந்து ஹோம் சிறப்புப்பள்ளியின் 25 ஆண்டு கால வரலாறுஅடங்கிய காணொளி காண்பிக்கப்பட்டது. சிறப்புக் குழந்தைகள் நடனமாடிஅனைவரையும் மகிழ்வித்தார்கள். தொடர்ந்து ஹோம் சிறப்புப்பள்ளியின் இயக்குநர்-தாளாளர் அருட்தந்தை. அஜீஷ் குமார் அறிமுகயுரையுடன்அனைவரையும் வரவேற்றார். குழித்துறை, ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்புநீதிபதியும் வட்ட சட்ட பணிகள் குழுத்தலைவருமான நீதிபதி சுந்தரி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். தொடர்ந்துகுழித்துறை, ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட உரிமையியல் நீதிபதி பல்கலைச் செல்வன் , குழித்துறை, ஒருங்கிணைந்த நீதிமன்றகுற்றவியல் நடுவர நீதிபதி மோசஸ் ஜெபசிங் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.வழக்கறிஞர் பால்சிங் பேசினார். ஹோம் சிறப்புப்பள்ளியின் தலைமையாசிரியர் டென்னிஸ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை தசைப்பயிற்சியாளர் ஜென்னிங்ஸ் தொகுத்து வழங்கினார். சட்ட விழிப்புணர்வு முகாமில் சிறப்புக்குழந்தைகள், அவர்தம் பெற்றோர்கள், பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும்நீதிமன்ற அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.