குழித்துறை மறை மாவட்டம் பொதுநிலையினர் பணிக் குழுவின் கிறிஸ்து பிறப்பு விழா அழகிய மண்டபம் அன்னை ஆதா சென்டரில் வைத்து நடந்தது. கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்து கிறிஸ்து பிறப்பு செய்தியை தெரிவித்தார். இயேசுவின் திரு இருதய சபை இறைவேண்டல் செய்தனர். மறை மாவட்ட பொதுநிலையினர் பணிக் குழு துணைச் செயலாளர் ரஞ்சித் குமார் வரவேற்றார். குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் பேரருள் சேவியர் பெனடிக்ட் முன்னிலை வகித்தார். மறை மாவட்ட பணிக்குழுக்கள் இயக்குனர் அருட்பணி மார்ட்டின் கருத்துரை வழங்கினார். மறை மாவட்ட மேய்ப்புப்பணி பேரவை துணைத் தலைவர் வர்க்கீஸ் வாழ்த்துரை வழங்கினார். குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ்சோடு இணைந்து மூத்த உறுப்பினர்கள் கேக் வெட்டினர். நிகழ்ச்சியின் இடையே நடனம் நடந்தது. மறை மாவட்ட பொதுநிலையினர் பணிக்குழு செயலர் மெர்லின் ஜோஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொதுநிலையினர் பணிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.