குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

Share others

மார்த்தாண்டம் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும்
குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறபப்பு பள்ளியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்புக் குழந்தைகளின் பல்வேறு
கலை நிகழ்வுகளுடன் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக மாறுவேட
அணிவகுப்பு நடந்தது. சிறப்பு
குழந்தைகளின் பெற்றோர்கள் அவ்வையார்,
விவசாயி, மன்னர், பாராதியார், கதகளி, நேரு போன்ற வேடங்களில் அலங்கரித்து
பங்கேற்க செய்தது அனைவரது கவனைத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து
மாற்றுத்திறனாளிகளின் வகைகள் பிறக்க காரணங்கள் தடுப்பு முறைகள் மருத்துவ
அரசு நலத்திட்டங்கள் போன்ற தகவல்கள் அடங்கிய காணொளி பதிவிடப்பட்டது.
அந்தந்த துறை மருத்துவர்களின் சார்ந்த பேட்டி காணப்பட்டு அதன் தொகுப்பை
காணொளியாக்கி பதிவிடப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த
விழிப்புணர்வு அனைவருக்கும் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து நடந்த விழா
அரங்கில் ஹோம் இயக்கத்தின் இயக்குநரும் தாளாளருமாகிய அருட்தந்தை அஜீஷ்
குமார் விழா அறிமுகவுரையோடு வரவேற்றார். சிறப்பு
விருந்தினர்கள் சிறப்பு குழந்தைகளுக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து
வழங்கி இந்த விழாவிற்கு வரவேற்றார்கள். இது விழாவின் முக்கிய சிறப்பம்சமாக
காணப்பட்டது. தொடர்ந்து பத்மனாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்பு நீதிபதி
மாரியப்பன் , குழித்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்பு
நீதிபதியும் குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான
நீதிபதி சுந்தரி , சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு
சிறப்புரையாற்றி மாறுவேட அணிவகுப்பில் வெற்றி பெற்ற சிறப்புக் குழந்தைகளுக்கு
பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்கள். தொடர்ந்து குழித்துறை வட்டசட்ட பணிகள்
குழுவின் மூத்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் , மார்த்தாண்டம்
துறை புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வதாஸ் , திரித்துவபுரம் பாப்புலர் மோட்டார் ஒர்க்ஸ் உரிமையாளர் பிபின்
பாபு , வழக்கறிஞர் பால்ஜி , வாழ்த்துரை
வழங்கினார்கள். இந்த சிறப்புமிகு கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய
மார்த்தாண்டம் மறை மாவட்டத்தின் செயலரும் மரியகிரி மலங்கரை கத்தோலிக்க
கல்லூரியின் தாளாளருமாகிய பேரருட்தந்தை. பிராங்கிளின் ஜோஸ்
தலைமை உரையாற்றினார். அவர்தம் உரையில் சிறப்புக்குழந்தைகளின்
பெற்றோர்கள் இறைவனின் தனி படைப்பாளர்கள் என்றும் கிப்டட் பெற்றோர்கள்
சிறப்பாக பார்ப்பதால் இறைவன் அதற்கான கைமாறு வழங்குவார் என்றும், தமது
தலைமை உரையில் எடுத்து கூறி மாறுவேட அணிவகுப்பில் சிறப்பு குழந்தைகளை
மிக நேர்த்தியாக அலங்கரித்து பங்கேற்க செய்ததை வெகுவாக பாராட்டினார்.
ஸ்ரீ தேவிகுமாரி
கலை கல்லூரி பேராசிரியை முனைவர் சிந்து குமாரி , உடற்கல்வி
இயக்குநர் நாராயணி சிறப்பு குழந்தைகளின் மாறுவேட
அணிவகுப்புக்கு நடுவர்களாக இருந்து மதிப்பெண் வழங்கினார்கள். தொடர்ந்து
மாறுவேட அணிவகுப்பில் பங்கேற்ற குழந்தைகளுக்கும் அலங்கரித்த பெற்றோர்களும்
சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினார்கள். ஹோம் சிறப்புப்பள்ளியின்
தலைமையாசிரியர் டென்னிஸ் நன்றி கூறினார்.
குழித்துறை ஸ்ரீ தேவிகுமாரி கலை கல்லூரி மாணவிகளின் நாட்டுப்பண் பாடலுடன்
விழா நிறைவுபெற்றது. விழாவில் சிறப்புக்குழந்தைகள் பெற்றோர்கள்
வழக்கறிஞர்கள் உபகாரிகள் பணியாளர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டு
சிறப்பித்தார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *