மார்த்தாண்டம் மறைமாவட்டம் சுகாதார பணி மையமான ஹெல்த் பார் ஒன் மில்லியன்
பேரியக்கத்தின் கீழ்
செயல்படும்
ஹோம்
அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டு
நிறைவு கொண்டாட்ட நிகழ்வுகள் குழித்துறை மார் எப்ரேம் அரங்கில் நடந்தது. மார்த்தாண்டம்
மறைமாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் விழாவிற்கு
தலைமை தாங்கி ஜூபிலி பேருரை வழங்கினார். தடம் என்னும் வரலாற்று
மலரை மேதகு ஆயர் வெளியிட மார்த்தாண்டம் மறைமாவட்ட குருகுல முதல்வர்
பேரருட்தந்தை. ஜோஸ்பிறைட் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும்
நலத்திட்டங்கள் குறித்தும், சிறப்புப் பள்ளியின் நற்செயல்களை குறித்தும்,
எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார். வெள்ளிவிழா செயல்பாட்டின் பத்து அம்ச
செயல்திட்டங்களில் ஒன்றான மாற்றுத்திறனாளிகள் குறித்த புத்தகம் ‘தீப்பிழம்பு
‘வெளியிட்டார்கள்,
அதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்
விஜய்வசந்த் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து ஜூபிலி விழா வாழ்த்துக்களை கன்னியாகுமரி பாராளுமன்ற
உறுப்பினர் விஜய்வசந்த் , விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்
தாரகை கத்பர்ட் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர்
சிவசங்கரன் , மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை.
ஜோஸ்பிறைட் , மேரி மக்கள் கன்னியர் மாகாணசபை உறுப்பினர்
அருட்சகோதரி ராணி சேவியர் , கீற்று’ மாற்று ஊடக இயக்குநர்
ஹாமீம் முஸ்தபா , குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.
ஆசைதம்பி , ஜெயராஜ் கம்பெனி குழுமத்தின் துணைத்தலைவர்
சங்கர், முன்னாள்
ராணுவ அலுவலர் றோச் ஆகியோர்கள்
வழங்கினார்கள்.
25 ஆண்டுகளாக சிறப்புப்பள்ளியில் தொடர் பணியாற்றிய
பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடந்தது.
முன்னதாக
ஹோம் சிறப்புப்பள்ளி 25 ஆண்டுகளாக பயணித்த பாதைகளை நினைவு கூறும் காணொளி
அறிக்கை மற்றும் வெள்ளிவிழா ஆண்டின் 10 அம்ச செயல்திட்டங்கள் அடங்கிய
காணொளி அறிக்கைகள் திரையிடப்பட்டன.
சிறப்புக் குழந்தைகள் பேண்ட் வாத்தியம் இசைமுழங்க அணிவகுப்புடன்
சிறப்புக் விருந்தினர்களை வரவேற்றார்கள். பெற்றோர்கள் ஆரத்தி எடுத்தார்கள்.
சிறப்புக் குழந்தைகளும் குழந்தைகளின் பெற்றோரும் நடனமாடி மகிழ்வித்தனர்.
இந்த நடனங்களை இன்பென்ட் நடனப்பள்ளி இயக்குநர்
பயிற்றுவித்திருந்தார். ஹோம் இயக்குநரும் தாளாளருமாகிய அருட்தந்தை.
அஜீஷ் குமார் வரவேற்றார். தலைமையாசிரியர்
டென்னிஸ் நன்றி கூறினார். அலோசியஸ்
நிகழ்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்புக் குழந்தைகள்,
பெற்றோர்கள், உபகாரிகள், கட்சி பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 400
பேர் பங்கேற்று சிறப்பித்தனர். சிறப்பாசிரியர் நாட்டுப்பண் பாட
விழா இனிதே
நிறைவு பெற்றது.