கன்னியாகுமரி மாவட்டம் கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு முன்னோர்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி கேசவன்புத்தன்துறை அருட்தந்தை பென்சிகர் தலைமையில் திக்குறிச்சி அருட்தந்தை ஆரோக்கிய ஜோஸ் அருளுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் மற்றும் அன்பியக் கலைநிகழ்வுகள் நடக்கிறது. இரண்டாம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 11 மணிக்கு சிறப்பு நவநாள் திருப்பலி மணலி தக்கலை அருள் தந்தை காட்வின் சௌந்தர்ராஜ் தலைமையில் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6,30 மணிக்கு திருப்பலி நாஞ்சில் நாதம் இயக்குனர் அருட்தந்தை ஞான தாஸ் தலைமையில் ஆலன்விளை அருட்தந்தை ஜாண் பிபின் அருளுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மூன்றாம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு திருப்பலி குழித்துறை மறை மாவட்ட நிதி பரிபாலகர் அருட்தந்தை ஜெயக்குமார் தலைமையில் பாம்பன்விளை அருட்தந்தை ஆன்றனி நெல்சன் அருளுரையோடு நடக்கிறது. 9 மணிக்கு இளைஞர் இயக்கம் நடத்தும் மூளைக்கு வேலை வினாடி வினா போட்டியும் மாலை 4.30 மணிக்கு வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டமைப்பு பொதுக்கூட்டமும் நடக்கிறது. 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 6.30 மணிக்கு திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதன்மை பணியாளர் அருட்தந்தை சேவியர் பெனடிக்ட் தலைமையில் பிலாவிளை அருட்தந்தை ஆல்வின் விஜய் அருளுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி இரவு 8.30 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. 6 ம் நாள் விழாவில் இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்வுகள் நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை,6 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி கல்குறிச்சி அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா தலைமையில் குழித்துறை மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மார்ட்டின் அருளுரையோடு நடக்கிறது. மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி இரவு 8.30 மணிக்கு மாபெரும் நடன போட்டி நடக்கிறது. 9 ம் நாள் விழாவான 16 ம் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை மாடத்தட்டுவிளை அருட்தந்தை மரிய ராஜேந்திரன் தலைமையில் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்காரத் தேர்பவனி நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலை 8.30 மணிக்கு பெருவிழா திருப்பலி அப்பட்டுவிளை தூய சூசையப்பர் ஆலய அருட்தந்தை சேவியர் புரூஸ் தலைமையில் புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் அருட்தந்தை காட்வின் செல்வ ஜஸ்டஸ் அருளுரையோடு நடக்கிறது. மதியம் 2 மணிக்கு அன்னையின் அலங்காரத் தேர்பவனி 5 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, புனித ஜோசப் வாஸ் அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அருட்பணி சேவியர் ராஜ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜாண்ராஜ் ஆல்பர்ட், செயலாளர் அனீஷ் ராஜ், துணை செயலாளர் பெனடிக்ட் ஆன்றனி, பொருளாளர் ஜோஸ்பின் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.
கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்பணி சேவியர் ராஜ் அனைவரையும் அழைக்கிறார்
