கோணம் உணவு குடோனில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு

Share others

கன்னியாகுமரி மாவட்டம் கோணம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிப கழகத்தின் கிடங்குகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கன்னியாகுமரி மண்டலம் கோணம்-1 மற்றும்
கோணம் -2 கிட்டங்குகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த இரண்டு
கிடங்குகளையும் ஆய்வு மேற்கொண்டபோது இருப்பு பதிவேட்டின்படி அத்தியாவசிய உணவு
பொருட்கள் சரி பார்க்கப்பட்டது. மேலும் பொது விநியோக திட்டத்திற்கு விநியோகம்
செய்யப்படும் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களின் எடை மற்றம் தரம் குறித்து
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து பெறப்பட்ட 517.449 மெ.டன்
பழுப்புநிற மிகை அரிசி இருப்பில் உள்ளது தொடர்பாக துறை அலுவலர்களுடன்
கேட்டறியப்பட்டதோடு, குடோனில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ள பழுப்புநிற மிகை அரிசியை
இ-டென்டர் மூலம் 8.12.2023 அன்று விற்பனை செய்வதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்பொருள் வாணிபகழக மேலாளர்
தெரிவித்து உள்ளார்.
மேலும் அமுதம் நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை
சமர்சீர் செய்து லாரிகளில் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு
மேற்கொண்டார்.

ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி,
நுகர்பொருள் வாணிய கழக மண்டல மேலாளர் செல்ல பாண்டியன், துணை மேலாளர்
(தரக்கட்டுபாடு) பிச்சை முருகன், கண்காணிப்பாளர் முருகன், அலுவலர்கள் உட்பட
பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *