கோரிக்கை மனு கொடுத்த உடனே மூன்று சக்கர சைக்கிள் வாங்கிய மாற்றுத்திறனாளி

Share others

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்ட சுனிதா மற்றும் தர்மராஜ் ஆகியயோருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளி ராஜத்துக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில் வேல் முருகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல்காதர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாரதி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *