சாலையில் சாகசம் என்னும் பெயரில் நீங்கள் செய்யும் தவறால் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்கும் உயிரிழப்பவரின் குடும்பத்தின் நிலைமையை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். மாணவர்கள் சாலையில் ரிஸ்க் எடுப்பதை விடுத்து தன்னுடைய சுய முன்னேற்றத்தை வளர்த்துக் கொள்ள ரிஸ்க் எடுக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பு கிளப் மாணவர் அமைப்பு திட்டத்தினை தொடங்கி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேச்சினார். மாணவர்கள் காவலர்களை பார்த்தவுடன் மட்டுமே ஹெல்மெட் அணியும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஹெல்மெட் போலீஸ்காக போட வேண்டாம் உங்களின் பாதுகாப்பிற்காக போடுங்கள் மேலும் உங்கள் பெற்றோர்களிடமும் ஹெல்மெட் அணிய கட்டாயப்படுத்துங்கள்.
நம்ம ஊர் சாலைகள் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் சாலைகள் இல்லை எனவே அதில் ரிஸ்க் எடுத்து சாகசம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார். வாலிப வயதில் உள்ளவர்கள் சாலையில் சாகசம் செய்து விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் நீங்கள் ரிஸ்க் எடுத்து செய்யும் சாகசம் எதிரேவரும் அப்பாவியின் குடும்பத்தை, குடும்பத்தின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என பேசினார்.
இந்த நிகழ்வில் மாணவர்கள் ஐபிஎஸ் அதிகாரியாக வர நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சந்தேகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கேட்டு அறிந்தனர்.
ரோடு சேப்டி கிளப் மாணவர் அமைப்பு மற்றும் செயல்பாடுகள்
▫️ தொடக்க கட்டமாக ஒவ்வொரு பள்ளிகளிலும் சுமார் 20 மாணவர்கள்
▫️ அனைவருக்கும் சீருடை மற்றும் தொப்பி வழங்கப்பட்டு உள்ளது
▫️ இந்த அமைப்பில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு போக்குவரத்து போலீசார் பயிற்சி அளிப்பார்கள்
▫️ போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்
▫️ இந்த அமைப்பில் உள்ள மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
▫️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நோ ஹெல்மெட், நோ என்டிரி மற்றும் ஜீரோ ஆக்சிடென்ட் குமரி உள்ளிட்ட விழிப்புணர்வு செய்திகளை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும். அதிகமான மாணவ மாணவியர்கள் இந்த அமைப்பில் சேர்ந்து போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து மக்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த நிகழ்வின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) இளம் செழியன்
கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.