சிவகங்கை மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கையர்களுக்கான சிறப்பு குறைதீர் முகம் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு குறைதீர் முகாமில் சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த திருநங்கையர், திருநம்பியார் கலந்துகொண்டு மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.