சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு

Share others

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவைகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா கள ஆய்வுகள் மேற்கொண்டார்.

அதில், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தணங்கோட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு உள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள்,
கல்லல் ஊராட்சி ஒன்றியம், செம்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் பள்ளிக்கட்டிட மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.28.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமானப்பணிகள் தொடர்பாகவும், ஆலங்குடி-கூத்தலூர் இடையே ரூ.61.37 லட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு உள்ள மெட்டல் சாலையின் தரம் குறித்தும், தளக்காவூர் இலந்தக்கண்மாய் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.13.84 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாருதல் பணி மற்றும் மடை கட்டும் பணிகள் தொடர்பாகவும்,

அதனைத்தொடர்ந்து, தேவகோட்டை நகராட்சி பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், மேலும், அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.42.00 லட்சம் மதிப்பீட்டில் தேவகோட்டை காடேரி அம்பாள் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பூங்கா அமைத்தல் பணி தொடர்பாகவும் மற்றும் என்.ஜி.ஓ காலனி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவைகள் தொடர்பாகவும் மற்றும் இப்பகுதியிலுள்ள காட்டுரணியில் ரூ.39.00 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாகவும், இராம்நகர் பகுதியிலுள்ள நியாய விலை கடையின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களும் விநியோகிக்கப்பட்டு வரும் குடிமைப்பொருட்களின் தரம் குறித்தும்,

மேலும்,தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானம்புவயல் தரிசு நில தொகுப்பின் படி வேளாண் காடுகள் மரம் வளர்ப்பு திட்டம் தொடர்பாக மரக்கன்றுகள் நடும் பணிகள் குறித்தும் என பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.259.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் அவர்களுடன் கள ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், துணை இயக்குநர் (வேளாண்மை) பன்னீர்செல்வம், தேவகோட்டை நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம், தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்கவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவிப் பொறியாளர், உதவி செயற் பொறியாளர், வட்டாட்சியர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *